அட கொடுமையே… என்னடா பண்றீங்க… யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது… 5 நிமிஷத்துல வேலைய முடிங்க… நகைக்கடையில் ரூ 2 கோடி மதிப்பு நகைகள் சுருட்டல்… நெஞ்சை உலுக்கிய CCTV வீடியோ…!

By Swetha on ஐப்பசி 5, 2026

Spread the love

ஹைதராபாத் மேடிபல்லியில் உள்ள கேரட்லேன் நகைக்கடையில் சுமார் ரூ 2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கொள்ளை குறித்துப் பேசிய துணைப் ஆணையர் சுரேஷ், இந்தச் சம்பவத்தில் மொத்தம் ஏழு பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதில் ஒரு நபர் மட்டும் கடைக்குள் சென்று கொள்ளையில் ஈடுபட, மற்ற ஆறு பேரும் வெளியே நின்று கண்காணிக்கும் வேலையைச் செய்துள்ளனர்.

   

ஒட்டுமொத்தக் கொள்ளைச் சம்பவமும் வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் கச்சிதமாக முடிக்கப்பட்டுள்ளது. கடைக்கதவை ஐந்து நிமிடங்களுக்கு மேல் திறந்து வைத்தால் அலாரம் அடிக்கும் என்ற விவரம் அந்த நபருக்கு முன்கூட்டியே தெரிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலுக்குத் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.