கூட்டுறவு வங்கிகளில் நகை கடன்… வாடிக்கையாளர்களுக்கு வெளியான HAPPY NEWS..!!

By Soundarya on கார்த்திகை 1, 2025

Spread the love

தமிழக கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், நகை கடன்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. கடந்த, 2024 – 2025ல், 70.28 லட்சம் பேருக்கு, 62,001 கோடி ரூபாய் நகை கடன்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையில் தங்கம் விலை உயர்ந்து வருவதையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகை, கிராமுக்கு 7,000 ரூபாயாக  உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது தற்போது அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக, 1 கிராம் தங்கத்துக்கு 6,000 ரூபாய் மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.