அடேங்கப்பா..! 50 விநாடி விளம்பரத்தில் நடிக்க 5 கோடி சம்பளம்.. நயன்தாரா காட்டில் மழை தான் போங்க…!!

By Soundarya on கார்த்திகை 1, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்திய அளவில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இறுதியாக இவருடைய நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.

இதனை தொடர்ந்து நயன்தாரா கைவசம் தற்போது டாக்ஸிக், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ், மூக்குத்தி அம்மன் டு என பல திரைப்படங்கள் உள்ளது. இப்படி பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தனது இரண்டு மகன்கள் மற்றும் கணவரோடு மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் 50 விநாடிகள் ஓடும் டாடா ஸ்கை விளம்பரத்தில் நடிப்பதற்கு நயன்தாரா 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிக்க 10 முதல் 15 கோடி சம்பளம் பெறும் நிலையில், விளம்பரத்தில் நடிக்க அவர் வாங்கும் சம்பளம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.