தமிழக கூட்டுறவு சங்கங்களில் அடமானம் வைக்கப்படும் நகைக்கடன்களுக்கான உச்சவரம்பை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.7,000 மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய தங்க சந்தை மதிப்பில் 75 சதவீதத்தைக் கணக்கில் கொண்டு இனி ஒரு கிராமிற்கு ரூ.10,000 வரை கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே அடமானம் வைக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் நகைகளைப் புதுப்பிக்கும் போதும் இந்த புதிய உச்சவரம்பு நடைமுறை செல்லுபடியாகும் என்று அரசு தெளிவாகத் தெரிவித்துள்ளது, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குப் பெருமளவில் நிதி உதவிகரமாக இருக்கும்.
