“கெட்டிமேளம் கெட்டிமேளம்” கோவிலில் எளிமையாக நடந்து முடிந்த நடிகர் ஜெயராம் காளிதாஸின் திருமணம்… வெளியான புகைப்படம்..!

By Soundarya on மார்கழி 8, 2024

Spread the love

மலையாள மற்றும் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் ஜெயராம். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்துள்ள நிலையில் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

இவர் தன்னுடைய மகன் காளிதாஸ் ஜெயராமை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்ததார்.

   

 

இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் தனுஷுக்கு தம்பியாக நெகட்டிவ் ரோட்டில் நடித்திருந்தார்.

#image_title

இந்த திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.

#image_title

மாடலிங் அழகியான தாரணி காளிங்கராயரை இவர் காதலித்து வந்த நிலையில் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சொகுசு ஹோட்டலில் கோலாகலமாக நடந்தது. நடிகர் ஜெயராம் இந்த ஆண்டு மே மாதம் தன்னுடைய மகள் மாளவிகாவின் திருமணத்தை குருவாயூர் கோவிலில் நடத்தி முடித்தார்.

அடுத்ததாக தனது மகன் காளிதாஸ் ஜெயராமுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த ஜெயராம்  இன்று மகனுக்கு கோவிலில் வைத்து எளிமையாக திருமணத்தை முடித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.