edakkal

புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம்… கேரளாவின் எடக்கல் குகைகளின் வரலாறு…

By admin on மார்கழி 8, 2024

Spread the love

இந்தியாவில் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கிறது. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் கற்கால மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றாக ஒரு சில இடங்களும் இருக்கிறது. அப்படி புதிய கற்கால மனிதன் வாழ்ந்த இடம் எடக்கல் குகைகள். இந்தக் குகைகள் கேரள மாநிலத்தில் அமைந்திருக்கிறது. இதன் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

இந்தியாவின் கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தின் நிர்வாக தலைமை இடமான கல்பெட்டா நகரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் எடக்கல் என்னும் இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில் அமைந்த இரண்டு இயற்கையான குகைகள் தான் எடக்கல் குகைகள். இது 8000 ஆண்டுகளுக்கு முன் உருவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

   

இந்த குகைகளில் புதிய கற்கால மனிதன் வாழ்ந்த சுவடுகளும் கிடைத்திருக்கிறது. இந்தக் குகைகள் இரண்டு அடுக்கு கொண்டது. கீழடுக்கு 18 அடி நீளம் 12 அடி அகலமும் 18 அடி உயரமும் கொண்டிருக்கிறது. மேலடுக்கு 96 அடி நீளமும் 22 அடி அகலமும் 18 அடி உயரமும் கொண்டது.

 

இந்தக் குகை சுவர்களில் கிமு பத்தாயிரம் முதல் கிமு 5000 வரையிலான காலப்பகுதியில் வரையப்பட்ட மனிதர்கள் விலங்குகள் மற்றும் வேட்டைக் கருவிகள் பாறை செதுக்கல்களைக் கொண்டு இப்போது வரலாற்று முந்தைய காலத்தில் மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. பிரித்தானிய இந்தியாவின் மலபார் பகுதிகளில் 1890 இல் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய பிரட் பாப்செட் என்பவர் இந்த குகைகளை கண்டுபிடித்தார். இந்த எடக்கல் குகைகள் கேரள மாநிலத்தின் பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கிறது.