#image_title
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து பல ஹிட்டு திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். பல வருடங்கள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் குறைந்த அளவு திரைப்படங்களில் தான் நடித்திருக்கின்றார். கதையை தேர்வு செய்து நடிப்பதனால் இவரது படங்கள் பெரும்பாலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.
இவர் கடைசியாக சைரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுபாமா பரமேஸ்வரன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்கள். தொடர்ந்து தன்னுடைய கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்ற தலைவராக இருந்த சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ராஜா உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார்.
இவருக்கு வயது 23. ஜெயம்ரவி மீது இருந்த மிகுந்த அன்பு காரணமாக ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகளை செய்து இருக்கின்றார். தனது ரசிகரின் மரணம் அறிந்த ஜெயம்ரவி ராஜாவின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவரின் குடும்பத்திற்கு எந்த உதவியாக இருந்தாலும் செய்ய தயார் என்று அவர் உறுதியளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…
உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இதயத் துடிப்பாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, தற்போது அமெரிக்க - ஈரான் இடையிலான போர்…
பிரிட்டனின் வால்சால் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள்ளேயே புகுந்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது பர்மிங்காம்…
மும்பையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர்,…