“நான்தான் ஜெயலலிதாவின் மகள், எனக்கு சீட் கொடுங்க”… அதிமுக அலுவலகத்தில் நுழைந்த பெண்ணால் மிரண்டு போன நிர்வாகிகள்…!

By Nanthini on தை 11, 2026

Spread the love

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்பாளர் நேர்காணலின் போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக்கொண்டு ஜெயலட்சுமி என்ற பெண் வருகை தந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாகவும், அதற்கான நேர்காணலில் பங்கேற்கவே தான் வந்திருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவரின் இந்தத் திடீர் வருகையும், உரிமைக் கோரலும் அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அலுவலகத்தில் இருந்த அதிமுக நிர்வாகிகள் ஜெயலட்சுமியின் வாதத்தை ஏற்க மறுத்து அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் நிலைமை மோசமடையவே, அங்கிருந்த கட்சியினர் அவரை அலுவலகத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் யாரும் இல்லை என்ற கருத்து நிலவி வரும் சூழலில், அவ்வப்போது இது போன்ற உரிமை கோரல்கள் எழுவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழலை உருவாக்கியது.