என்ன தான் நடக்குது..? தவெக போஸ்டரில் ஜெயலலிதா, MGR புகைப்படங்கள்… செங்கோட்டையனால் பரபரப்பில் தமிழக அரசியல்..!!

By Soundarya on மார்கழி 3, 2025

Spread the love
சமீபத்தில்  அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடைய விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு ஜெயலலிதா புகைப்படத்துடன் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.   இந்த போஸ்டரில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் புகைப்படத்தை அவர் பயன்படுத்தியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து வந்த பிறகும் கூட ஜெயலலிதா புகைப்படத்தை தவெக போஸ்டரில் செங்கோடடியன் பயன்படுத்துவது ஏன்? என அனைவரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.