இன்றைய காலகட்டத்தில் தொழிநுட்பம் வளர வளர எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு தவறுகளும் நடக்கிறது. டெக்னலாஜியை பயன்படுத்தி ஏராளமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்பை எடுத்து ‘ஹலோ’ என்று சொல்ல வேண்டாம் என சைபர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏனெனில் எதிரில் இருக்கும் ஸ்கேமர்கள் அந்த “ஹலோ” என்ற வார்த்தையை ரெக்கார்ட் செய்து, AI மூலமாக உங்களுடைய குரலை குளோனிங் செய்து, நீங்கள் பேசுவது போல பேசி, உங்களுக்கு தெரிந்தவர்களிடமிருந்து பணத்தை பறிக்கலாம் என்பதால், அழைப்பவர் பேசிய பிறகே நீங்கள் பேச தொடங்குங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
