Categories: சினிமா

ஜெயலலிதா கர்ப்பமாக இருந்தார்.. ஆனால் அவருக்குக் குழந்தைகள் இல்லை – பிரபலம் பகிர்ந்த தகவல்!

Spread the love

 

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்தவர் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான ஜெயலலிதா. வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகமான ஜெயலலிதா வெகு விரைவிலேயே அப்போது உச்சத்தில் இருந்த எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

ஜெயலலிதாவின் நடிப்பு திறமையில் கவரப்பட்ட எம் ஜி ஆர், அவரை தன்னுடைய பல படங்களில் பயன்படுத்தினார். எம் ஜி ஆரோடு அதிக படங்களில் கதாநாயகியாக இணைந்து நடித்தவர் ஜெயலலிதாதான். இருவரும் இணைந்து 28 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். தன்னுடைய பதின்ம வயதிலேயே சினிமாவுக்கு அறிமுகமான ஜெயலலிதா தான் அரசியலில் காலடி எடுத்துவைக்கும் வரை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்தார்.

எம் ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த போது, அதில் இணைந்த ஜெயலலிதா அதன்பின்னர் கட்சியில் பல்வேறு பொறுப்புகளைப் பெற்று அவரின் மறைவுக்குப் பின்னர் அக்கட்சி தலைவராகி, தமிழகத்தின் முதல்வராகவும் 6 முறை பதவியேற்றார். அரசியலைப் பொறுத்தவரை அவர் உறுதியான மனதிடம் கொண்ட இரும்புப் பெண்மணியாக வர்ணிக்கப்படுகிறார்.

ஜெயலலிதா கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து மறைந்தார். ஆனால் அவருக்கு தெலுங்கு நடிகரான சோபன் பாபுவுடன் காதல் இருந்தது என்று பலரும் சொல்லக் கேள்வி பட்டிருப்போம். அதை இப்போது ஜெயலலிதாவோடு நெருங்கிப் பழகிய நடிகையும் தயாரிப்பாளருமான குட்டி பத்மினியும் உறுதிப் படுத்தியுள்ளார்.

அதில் “அம்மு அக்காவை இடையில் ஒருமுறை சந்தித்த போது அவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக என் அம்மாவிடம் சொன்னார். ஆனால் அந்த கருவைக் கலைத்துவிடப் போவதாகவும் சொன்னார். அவருக்கும் சோபன் பாபுவுக்கும் இடையில் இருந்த காதல் கல்யாணம் வரை சென்று நின்றது. ஆனால் அவருக்குக் குழந்தைகள் எல்லாம் இல்லை” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

அம்மாடியோ… 75 வயசுல விவாகரத்தா?… 4 மகன்கள் பிரித்து வைத்த பெற்றோர்… 51 வருஷ பந்தத்தை பஞ்சாயத்து பண்ணிய போலீஸ்… உ . பி – யில் நடந்த சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷஹர் மாவட்டத்தில், 51 ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்த 70 வயது மூதாட்டிக்கும் 75 வயது முதியவருக்கும் இடையே…

5 minutes ago

“தேமுதிகவுக்கு 10 சீட் கொடுத்தால் உங்கள் கண்ணை ஏன் உறுத்துகிறது…?” பிரேமலதாவின் ஆவேச கேள்விக்கு திருமாவளவன் அதிரடி விளக்கம்…!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைக்கப்பட்டது குறித்தும், அவர்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்தும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசிய…

10 minutes ago

ஐயோ… கீழே விழுந்துடாதீங்க… 9 வது மாடி ஜன்னல் விளிம்பில் விளையாடிய குட்டீஸ்கள்… அலறிய பக்கத்துக்கு வீட்டு பெண்… இணையத்தில் கொந்தளித்த நெட்டிசென்கள்…!

மழையின் மெல்லிய சாரலும் குளிர்ந்த காற்றும் பால்கனி அமர்வை இதமாக்கிக் கொண்டிருந்த வேளையில், எதிரே இருந்த கட்டிடத்தின் 9வது மாடியில்…

19 minutes ago

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த விழாவில் அலட்சியமும் அவமதிப்புமே பரிசு… மக்களை புண்படுத்திட்டீங்க… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேக விவகாரத்தில் வானதி சீனிவாசன் கண்டனம்…!!

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…

1 மணத்தியாலம் ago

“மின் கட்டணத்தைப் பார்த்து சொரணை வந்திருக்கு…” மதுக் கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மயக்கத்தில் மக்கள்…” தவெக ஆட்சியை கிழித்தெறிந்த ஆர்.எஸ். பாரதி…!!

சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…

1 மணத்தியாலம் ago

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” “பூங்காற்று திரும்புமா பாட்டு கேட்ட காரோட்டிக்கு ஷாக்… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய ஸ்கூட்டி பெண்… பகீர் சம்பவம்…!!!

திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…

1 மணத்தியாலம் ago