Categories: சினிமா

காதலர்கள் சேர்ந்திருந்ததே பத்து நிமிஷம்தான்… ஆனா படம் முழுக்க காதல்தான்… 21 ஆண்டுகளை நிறைவு செய்த ஜே ஜே!

Spread the love

தமிழ் சினிமாவில்  அலைபாயுதே படம் மூலமாக மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் மாதவன். அந்த படம் ஹிட்டாக தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் கதாநாயகர்களில் ஒருவரானார். தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

அலைபாயுதே ஹிட்டானதும் விஜய், அஜித் போன்ற அப்போதைய இளம் ஹீரோக்கள் ஏழெட்டு ஆண்டுகள் போராடி பெற்ற புகழை மாதவன் ஒரே படத்தில் பெற்றார். அதையடுத்து அவர் நடித்த என்னவளே என்ற திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

காதல் படங்களாக நடித்துக் கொண்டிருந்த மாதவன் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறுமுன்னர் நடித்த காதல் படங்களில் ஒன்றுதான் ஜே ஜே. அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சரண் இயக்கத்தில் மாதவன், அமோகா, பூஜா, கலாபவன் மணி, டெல்லி கணேஷ், சார்லி, மாளவிகா அவினாஷ் என பலர் நடித்த இந்த படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது.

#image_title

இந்த படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் அதன்பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தில் மாதவனின் நடிப்பும், பரத்வாஜ்-வைரமுத்து வெற்றிக் கூட்டணியின் அழகான பாடல்களும் இன்றளவும் இந்த படத்தை நினைவுகொள்ளத் தக்க ஒன்றாக அமைந்துள்ளன.

காதல் படமான இதில் கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்திருப்பதே பத்து நிமிடம்தான் இருக்கும். அந்த 10 நிமிடத்தில் கூட அவர்கள்  காதலர்களாக இல்லாமல் முன்பின் அறியாத நபர்களாகவே இருப்பார்கள். அதன் பின்னர் கதாநாயகி கொல்கத்தா சென்றுவிட அவளைத் தேடி கதாநாயகன் அலைவதுதான் கதை. அதன் பின்னர் க்ளைமேக்ஸில்தான் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள்.

ஒரு காதல் படத்தில் காதலர்கள் இருவரும் திரையில் ஒன்றாமல் மொத்தப் படத்தையும் போரடிக்காமல் இழுத்து செல்லும் வித்தையை செய்து காட்டியிருப்பார் இயக்குனர் சரண். இதற்கு முன்னர் இதே போன்ற கதையமைப்பில் அகத்தியனின் காதல் கோட்டை திரைப்படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

2 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago