ஜெமினிகணேசன் தமிழகத்தின் புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர். இவரது இயற்பெயர் கணபதி சுப்ரமணியன் என்பதாகும். பின்னர் இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது. பிறகு ஜெமினி ஸ்டுடியோவில் இவர் பணியாற்றி புகழ் பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.ஆரம்பத்தில் ஜெமினி ஸ்டுடியோவில் புது முகங்களை தேர்வு செய்யும் கேஸ்டிங் டைரக்டராக பணியாற்றினார். 1947 ஆம் ஆண்டு மிஸ் மாலினி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜெமினி கணேசன். பிறகு 1952 இல் வெளியான தாய் உள்ளம், வல்லவனுக்கு வல்லவன் ஆகியா இரண்டு திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் ஜெமினி கணேசன்.
அதற்குப் பிறகு 1953 ஆம் ஆண்டு பெண் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜெமினி கணேசன். மனம் போல் மாங்கல்யம் திரைப்படத்தில் இரட்டை வேடத்திலும் நான் அவன் இல்லை திரைப்படத்தில் 9 தோற்றங்களிலும் ஜெமினி கணேசன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். பிறகு தமிழ் சினிமாவில் ஏறு முகத்தையே கண்ட ஜெமினி கணேசன் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். காதல் சம்பந்தமான திரைப்படங்களில் அதிகமாக இவர் நடித்திருந்ததால் இவரை காதல் மன்னன் என்று மக்கள் அழைத்தனர்.
தென்னிந்திய மொழிகளில் மொத்தமாக 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் ஜெமினி கணேசன். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய மூவரையும் அந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் என்று அழைத்தனர். அந்தளவுக்கு பிரபலமாக இருந்தார் ஜெமினி கணேசன். ஆரம்பத்தில் AVM தயாரித்த படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜெமினி கணேசன் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சபிதா ஜோசப் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஜெமினிகணேசன் மூன்று திருமணங்கள் செஞ்சிக்கிட்டாரு. இந்த மூன்று திருமணத்திலேயும் முதல் மனைவி ஆதரவு இருந்தது. முதல் மனைவி சம்மதத்துடன் இரண்டாவது சாவித்திரி, புஷ்பவல்லி ஆகியோரை திருமணம் செஞ்சிக்கிட்டாரு. நான்காவதும் அமெரிக்க பெண்ணை திருமணம் செஞ்சாரு. அதுக்கும் முதல் மனைவி எதுவுமே சொல்லவில்லை. இவ்வளவு நடந்தும் அன்னைக்கி அவங்க புரிதலோடு தான் இருந்தாங்க என்று கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் தொடங்கும் ஒரு சாதாரண நட்பு, நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதை அண்மைய உளவு…
இந்த விபத்திற்கான இழப்பீட்டுப் பொறுப்பு லாரி ஓட்டுநரைச் சேராது; வணிக ரீதியான சரக்குப் போக்குவரத்தில் இத்தகைய இழப்புகள் முழுமையாகக் காப்பீடு…
டெல்லியின் நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளே ஐந்து மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில்…
சென்னையில் உள்ள முக்கிய மற்றும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான திருவான்மியூர் டைடல் பார்க் அருகே, திடீரென சாலையில் பெரிய பள்ளம்…
கைதி ஒருவரை அழைத்துக்கொண்டு ரயிலில் பயணித்த ராஜஸ்தான் மாநிலக் காவலர்களுக்கும், ரயில்வே பாதுகாப்புப் படை வீரருக்கும் இடையே முறையான பயண…
ஃபிளை துபாய் விமானத்தில் நடுவானில் திடீரென ஏற்பட்ட விபத்து அல்லது உடல்நலக்குறைவால் கடுமையாகக் காயமடைந்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை,…