நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நிலையில் அரசியல் களத்தில் குதித்து விட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இப்போது பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது மகன் ஜேசன் சஞ்சய் தனது அப்பா விஜய் போல நடிப்பதில் ஆர்வம் காட்டாமல், அவரது தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டினார். இப்போது லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ஒரு படத்தை ஜேசன் சஞ்சய் டைரக்ட் செய்து வருகிறார்.
இந்த படத்துக்கு சிக்மா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடல் காட்சியில் நடிகை கேத்தரின் தெரசாவுடன் இயக்குனர் ஜேசன் சஞ்சய் குத்தாட்டம் போட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிப்பில் ஆர்வமில்லை என்று ஆரம்பத்தில் சொன்ன ஜேசன் சஞ்சய், தனது இயக்கத்தில் உருவாகும் முதல் படத்திலேயே ஐட்டம் பாட்டுக்கு நடிகையுடன் குத்தாட்டம் போட தயாராகி விட்டார். இனி விரைவில் படத்தில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்து விடுவார். தமிழ் சினிமாவில் தனது அப்பா விஜய் விட்டுச் செல்லும் இடத்தை பிடிப்பதே ஜேசன் சஞ்சயின் லட்சியமாக மாறிவிடும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசத் துவங்கி விட்டனர்.
