Actress Janani Ashok Kumar

நான் கர்ப்பமாக இருப்பது போல் உணர்கிறேன்… சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் போட்ட பதிவு – ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on தை 5, 2026

Spread the love

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஜனனி அசோக் குமார். மௌன ராகம் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். இப்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் என்ற தொடரில் கதாநாயகியா நடித்த அவர் பிறகு அதிலிருந்து விலகினார். வேற மாதிரி ஆபீஸ் என்னும் வெப் தொடரில் முக்கிய கேரக்டரில் ஜனனி அசோக்குமார் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனனி அசோக்குமார் வெளியிட்ட ஒரு பதிவில், நான் கர்ப்பமாக இருப்பது போல் உணர்கிறேன். ஏனென்றால் என் தோழியின் வளைகாப்பு விழாவில் ஒரு தட்டு நிறைய பிரியாணி சாப்பிட்ட பின்… என்ற கேப்ஷனுடன் அதை பகிர்ந்துள்ளார். அத்துடன் கர்ப்பமாக இருப்பவரை போல கையில் வயிற்றுப் பகுதியை பிடித்து ஒரு புகைப்படத்தை எடுத்து ஜனனி அசோக் குமார் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.