நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதைத் திருவிழாவைப் போலக் கொண்டாட ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நாளைச் சிறப்பிக்கும் வகையில், சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நாளை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கி அசத்தியுள்ளது.
மேலும், அந்நேரத்திற்குள் அனைவரும் விஜய்யின் திரைப்படத்தைக் கண்டு மகிழுமாறு அன்போடு அறிவுறுத்தியுள்ள அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. திரையுலகில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கும் தளபதியின் ‘ONE LAST DANCE’ எனும் இந்த இறுதி ஆட்டத்தைக் திரையில் காண ஊழியர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
