BREAKING: ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வந்தாச்சு சூப்பர் அப்டேட்…!!

By Soundarya on தை 22, 2026

Spread the love

‘ஜன நாயகன்’ படத்தின் வெளியீட்டிற்குத் தடை கோரிய வழக்கில், தவெக தரப்பு வழக்கறிஞர் இரண்டு நாட்களுக்குள் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்தார். இருப்பினும், சென்னை உயர்நீதிமன்றத்தின் (Madras HC) தீர்ப்பு வழங்கும் பட்டியலில் இந்த வழக்கு இதுவரை இடம்பெறவில்லை. தற்போது ஜனவரி 22-ம் தேதி என்பதால், அடுத்தடுத்த நாட்களான சனி (ஜன.24), ஞாயிறு (ஜன.25) வார இறுதி விடுமுறைகளும், அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ஜன.26) குடியரசு தின தேசிய விடுமுறையும் வருகின்றன. இதனால் நீதிமன்றம் தொடர்ந்து விடுமுறை நாட்களைச் சந்திக்கிறது.

இந்த விடுமுறை நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 27 (செவ்வாய்க்கிழமை) அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வத் தீர்ப்பு வெளியான பின்னரே, ‘ஜன நாயகன்’ திரைப்படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள்.