அய்யய்யோ… கடைசி நேரத்தில் இப்படி பண்ணிட்டாங்களே? தளபதி ரசிகர்கள் விரக்தி!

By Elango on மார்கழி 31, 2025

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. இதுவே அவரது கடைசி படம் என்பதால் தளபதி ரசிகர்கள் இந்த படத்தை முதல் நாளிலேயே பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் காத்திருக்கின்றனர். இதிலும் பலர் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் ஆர்வத்தில் டிக்கெட் முன்பதிவை செய்து வருகின்றனர்.

வழக்கமாக தமிழ்நாட்டில் புதிய படங்கள் ரிலீஸான போது அதிகாலை 4 மணி காட்சி இருந்தது. ஆனால் சில சம்பவங்களால் கடந்த சில ஆண்டுகளாக காலை 9 மணிக்கு தான் முதல் காட்சியே அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஆந்திரா கர்நாடகா கேரளா மாநிலங்களில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்களில் அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

   

அதனால் தமிழ்நாட்டில் உள்ள தளபதி ரசிகர்கள் கேரளா பாலக்காடு, பெங்களூரு ஆந்திரா சென்று அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ் படங்களை முன்னதாகவே பார்த்து விடுவது வழக்கம். இந்த முறையும் ஜனநாயகன் படத்தை அதிகாலை 4 மணி காட்சியை பார்க்க ஆர்வமாக இருந்தனர். ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி தமிழ்நாட்டில் ஜனநாயகன் படம் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் துவங்குகிறது. கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கு தான் முதல் காட்சி துவங்கும். அதிகாலை 4 மணி காட்சி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தளபதி ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது.