என்னுடைய அந்த ட்ரேட்மார்க் சிரிப்பை சொல்லிக் கொடுத்ததே அந்த நடிகர்தான்… ஜனகராஜ் பகிர்ந்த ரகசியம்!

By vinoth on கார்த்திகை 5, 2024

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் காமெடி நடிகராக பிரபலமானவர் நடிகர் ஜனகராஜ். 80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான். 1978ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த  ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

ஜனகராஜ் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு கிடாரிஸ்ட்டும் ஆவார். தமிழ் சினிமாவில அதிகளவில் உலக சினிமா படங்கள் பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட நடிகர்களில் ஒருவர். ஜனகராஜுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்தவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர்.

   

அவரோடு ஜனகராஜ் இணைந்து நடித்த நாயகன், அபூர்வ சகோதரர்கள் மற்றும் குணா போன்ற படங்கள்தான் அவரின் கேரியரில் அவர் நடித்த சிறப்பான படங்கள் என சொல்லலாம்.  அதிலும் குறிப்பாக  அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் நகைச்சுவையின் உச்சமாக அமைந்தது. தொடர்ந்து நடித்து  முன்னணி நடிகராக வரவேண்டிய ஜனகராஜ் தன்னுடைய குடிப்பழக்கத்தால் 90 களில் வாய்ப்பை இழந்தார். அதன்பின்னர் இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய்ள்ளார்.

   

#image_title

 

இந்நிலையில் ஜனகராஜ் தன்னுடைய ட்ரேட் மார்க் சிரிப்புப் பற்றி பேசும்போது “என்னுடைய அந்த வித்தியாசமான நடிப்புக்குக் காரணமே கமல் சார்தான். அவர்தான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்துக்கு அப்படி சிரிக்க சொன்னார். அது மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதன் பின்னர் எல்லா படத்திலும் அதே மாதிரி நடிக்க சொன்னார்கள்” எனக் கூஇயுள்ளார்.

கமல்ஹாசன் ஜனகராஜ் ஆர் எஸ் சிவாஜி கதாபாத்திரங்களை வைத்தே அதை ஒரு தனி சினிமாவாக எடுக்கலாம் என ஆசைப்பட்டாராம். ஆனால் அதற்குள் ஜனகராஜுக்கும் ஆர் எஸ் சிவாஜிக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அவர்கள் அடித்துக் கொள்ளும் நிலைக்கு சென்றதால் அதிருப்தியில் அந்த எண்ணத்தையேக் கைவிட்டு விட்டாராம் கமல்.