kuberar

செல்வத்தை அள்ளி தரும் குபேர வழிபாடு… எப்போது எப்படி செய்ய வேண்டும் தெரியுமா…?

By admin on கார்த்திகை 5, 2024

Spread the love

இந்து மதத்தில் செல்வத்திற்கு அதிபதியாக கூறப்படுபவர் குபேர கடவுள். தன்னிடம் எப்போதுமே தங்க காசுகளையும் பணத்தினாலும் இருப்பது போல குபேரர் படங்களை நாம் பார்த்திருப்போம். குபேரர் தீவிரமான சிவ பக்தர். இவருடைய அளவில்லா சிவபக்தியால் வட திசைக்கு அதிபதியாக இருக்கும் வரத்தை பெற்றார். சிவபெருமானின் வடிவமான சொர்ண பைரவர் குபேரருக்கு செல்வத்தை பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்தார். மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற்றவர் குபேரர். அதனால் இந்த குபேரரை வழிபாடு செய்யும்போது செல்வ வளம் வீட்டில் பெருகும் என்பது ஐதீகம். இந்த குபேரரை எப்படி வழிபாடு செய்வது எந்த நேரத்தில் செய்வது என்பதை பற்றி இனி காண்போம்.

   

குபேரருக்கு உகந்த நாளாக சொல்லப்படுவது வியாழக்கிழமை ஆகும். இந்த நாளில் வீட்டில் குபேரரை வழிபடும் போது அவரின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும். குபேர வழிபாடு செய்வதற்கு முதலில் குபேர விளக்கு அல்லது அகல் விளக்கை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கை வைப்பதற்கு தட்டு பச்சரிசி ஐந்து ரூபாய் நாணயங்கள் தாமரை மலர் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். வியாழக்கிழமை அன்று அதிகாலையில் இருந்து குளித்துவிட்டு குபேர விளக்கு இருக்கும் அதை வைத்திருக்கும் தட்டிருக்கும் ஒற்றைப்படையில் மஞ்சள் குங்குமம் போட்டு வைக்க வேண்டும்.

   

அதற்குப் பிறகு தட்டில் பச்சரிசியை பரப்பி அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து குபேரன் படத்திற்கு முன்னால் தட்டை வைத்து விட்டு அதில் விளக்கை வைத்து தாமரை மலர் அல்லது சங்கு ஆகிய பூக்களை சாற்றி விளக்கேற்ற வேண்டும். குபேரருக்கு மிகவும் விருப்பமான உணவு அவல் என்பதால் அவளுடன் சிறிதளவு பால் சர்க்கரை சேர்த்து நெய்வேத்தியமாக படைத்து வழிபடலாம்.

 

குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பச்சை நிற திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கில் ஐந்து கற்கண்டு சேர்த்து விளக்கை சுற்றி வாசனை மலர்கள் வைத்து நம் வீட்டு வா நிலை வாசலில் இடதுபுறம் குபேரருக்கு உகந்த வடக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். குபேர விளக்கு ஏற்றும் போது மகாலட்சுமியை மனதார நினைத்து ஸ்ரீ மகாலட்சுமி குபேராய நமஹ மந்திரத்தை மனதில் உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதேபோல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 5 மணி முதல் 6:00 மணிக்குள் அல்லது மாலை 5 மணியிலிருந்து எட்டு மணிக்குள்ளாக இந்த குபேர வழிபாடை செய்யும்போது நம் வீட்டில் பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வ வளத்தை பெருக்கும் அருளை குபேரர் நமக்கு வழங்குவார். கடன் தீர்ந்து வீட்டில் மகிழ்ச்சி நிலவும் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.