Categories: சினிமா

கவுண்டமணி செந்தில் காமெடி எங்க இருந்து காப்பி அடிச்சாங்க தெரியுமா?… நடிகர் ஜனகராஜ் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் காமெடி நடிகராக பிரபலமானவர் நடிகர் ஜனகராஜ். 80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான். 1978ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த  ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்

ஜனகராஜ் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு கிடாரிஸ்ட்டும் ஆவார். தமிழ் சினிமாவில அதிகளவில் உலக சினிமா படங்கள் பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட நடிகர்களில் ஒருவர். ஜனகராஜுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்தவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர்.

அவரோடு ஜனகராஜ் இணைந்து நடித்த நாயகன், அபூர்வ சகோதரர்கள் மற்றும் குணா போன்ற படங்கள்தான் அவரின் கேரியரில் அவர் நடித்த சிறப்பான படங்கள் என சொல்லலாம்.  அதிலும் குறிப்பாக  அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் நகைச்சுவையின் உச்சமாக அமைந்தது. அந்த படத்தில் தப்பு தப்பாக அவர் துப்பறிய அதை சிலாகித்து ஆர் எஸ் சிவாஜி “தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க” என ஐஸ் வைப்பார்.

இப்படி பிரபல நடிகராக இருந்த ஜனகராஜ் ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்தார். இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள அவர் 96 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய காலத்தில் தனது போட்டியாளர்களாக அறியப்பட்ட கவுண்டமணி செந்தில் காமெடி குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

அதில் “கவுண்டமணி செந்தில் காமெடி என்பது வேறு. அவர்களின் நகைச்சுவை ட்ராக் எல்லாம் எழுதியது வீரப்பன் என்பவர்தான். அவர்களின் காட்சிகள் எல்லாம் ஹாலிவுட் நடிகர்களான லாரல் ஹார்டி ஆகியோரிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்டிருக்கும். வீரப்பன் போய் படத்தைப் பார்ப்பார். அதில் இருக்கும் காட்சிகளை அப்படியே மாற்றி எழுதிவிடுவார்.

கவுண்டமணி செந்தில் ஒரு படத்துக்குப் போனால் இரண்டு நாட்களில், 8 சீன்களை நடித்துவிட்டு போய்விடுவார்கள். நான் அப்படி அல்ல. ஒரு குணச்சித்திர நடிகர். ஒரு படத்துக்கு 10 நாளாவது நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

அட இது நல்லா இருக்கே?… வீட்டு வேலை செய்ய மனைவிக்கு மாதச் சம்பளம்…. அரசு அதிகாரியின் நெகிழ வைக்கும் செயல்…!

வீட்டு வேலைகளை வெறும் கடமையாகப் பார்க்காமல், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் "சம்பளம்" போன்ற…

5 minutes ago

“9 நாட்களாக இருண்ட சுரங்கம்… 216 மணி நேர நரகம்”…. உணவில்லாமல் உயிர்பிழைத்த அதிசயம்….. நேபாளத்தில் நடந்த நடுநடுங்க வைக்கும் சம்பவம்….!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் காணாமல்…

14 minutes ago

“ஹார்முஸ் இனி ‘ட்ரம்ப் ஜலசந்தி’?”…. போட்ட ஒரே போஸ்ட்டால் வெடித்த உலகப்போர் பதற்றம்…. ஈரானை அதிரவைத்த அந்த ஒரு அறிவிப்பு…!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து…

31 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்த 4 வயது சிறுவன்…! பள்ளி சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்… மனதை ரணமாக்கும் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இதயத்தை நொறுக்கும் சோகச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவநீத் என்ற 4 வயது…

36 minutes ago

“ராகுல் இல்ல.. விஜய்தான் PM”…. கொந்தளித்த காங்கிரஸ், கலக்கத்தில் இடதுசாரிகள்…. மோடிக்கு அடித்த ‘மெகா லக்கி பிரைஸ்’….. கூட்டணியில் உச்சக்கட்ட விரிசல்..!

2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள், தமிழகத்தில் ஆளும்…

40 minutes ago

“பெண்களுக்கு ரூ.3,000 … இலவச பயணம்… 365 நாள் லீவ்”… CM விஜய் கொடுத்த அந்த ‘3 சர்ப்ரைஸ்’ …. கொண்டாட்டத்தில் தமிழ்நாடு….!

தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய…

45 minutes ago