BREAKING: ஜன நாயகன் படத்திற்கு ‘A’ சான்று…! சற்றுமுன் அறிவுப்பு…!!

By Swetha on ஆடி 9, 2026

Spread the love

சுமார் 7 மாத கால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு ஒருவழியாக சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தத் திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி வருகின்றனர்.

அரசியல் பின்னணி கொண்ட கதையாக எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தில், “CM விஜய்” என்று திரையில் தோன்றும் ‘டைட்டில் கார்டு’-ஐக் காண்பதற்காக ரசிகர்கள் தங்களின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளாகப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். நீண்ட இழுபறிக்குப் பின் தணிக்கை நிறைவடைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே பல மடங்கு அதிகரித்துள்ளது.