ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. ஜனநாயகன் படம் தொடர்பாக வருகின்ற ஜனவரி 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இதனிடையே பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது. இதனை தொடர்ந்து சென்சார் போர்டும் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கேட்டுக் கொண்டுள்ளது. தணிக்கை சான்றிதழ் சிக்கல் தீரும் என எதிர்பார்த்த விஜய்க்கு சென்சார் போர்டின் நடவடிக்கை அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
திமுக அரசையும், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யையும் தொடர்ந்து விமர்சித்து வரும் தவெக லயோலா மணி, அரசு…
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்…
தென்மேற்கு ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நிலவி வரும் மோதல் தற்போது கொடூரமான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் உச்சகட்டமாக,…
மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'கேட்வே ஆஃப் இந்தியா' அருகே, நபர் ஒருவர் சாதாரணமாகக் கடலில் குப்பைகளைக் கொட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
ரயிலில் இருந்து ஸ்விகி டெலிவரி ஊழியர் விழுந்த விவகாரத்தில், அந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் பிஜய் ஆனந்த் தனக்கு கடும்…
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பாலி காவல் நிலையத்திற்குள், நபர் ஒருவர் தனது மனைவியைப் பின்னால் இருந்து சுட்டுக்கொன்ற…