2026 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளை உரிமையாளர்கள் தயாராகி வருகிறார்கள். பல மாதங்களாகவே காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதிகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதன்படி அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதியும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு போட்டி அனைத்து ஊர்களிலும் நடத்தப்படும் நிலையில் தற்போது புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
