அம்மாடியோ ஒரு கிலோ தீபாவளி ஸ்வீட் ரூ.1.11 லட்சமா?… அப்படி என்னப்பா இதுல இருக்கு… இணையத்தை அலறவிடும் ஜெய்ப்பூரின் ஸ்வீட்…!

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெய்ப்பூரில் உள்ள தியோஹார் என்ற பிரபல நிறுவனம் தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட ஆடம்பர இனிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. பட்டய கணக்காளராக இருந்து உணவு புதுமையாளராக மாறிய அஞ்சலி ஜெயின் என்பவர் தான் இந்த நிறுவனத்தின் நிறுவனர். இவர்களின் தங்க ஸ்வீட் வகைகளில் மிகவும் விலை உயர்ந்த இனிப்பு என்றால் அது ஸ்வர்ண பிரசாதம் தான்.

இந்த இனிப்பு வகையின் ஒரு கிலோ விலை 1,11,000 ரூபாய் ஆகும். ஆயுர்வேதத்தின்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கருதப்படும் தங்க சாம்பலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்வர்ண பஸ்ம் பாரத் (ஒரு கிலோ 85 ஆயிரம்), 24 காரட் முந்திரி கட்லி (ஒரு கிலோ 3500) போன்ற மற்ற விலை உயர்ந்த இனிப்புகளும் விற்பனைக்கு உள்ளன. தற்போது இந்த செய்தி இணையத்தில் வெளியாகி விலையை கண்டு பலரையும் வியக்க வைத்துள்ளது.