தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகளை தடுப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி கே.என் பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அந்த ஆணையம் தரும் அறிக்கையின்படி தமிழக அரசு தனிச் சட்டம் இயற்றும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
