தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். உலகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 300 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கும் யோசனை இருப்பதாகவும் அதனைப் போலவே கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களின் இரண்டாவது பாகம் எடுக்கும் திட்டம் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ரஜினி மற்றும் விஜய் இருவரும் பெரிய மாஸ் நடிகர்கள் என்பதால் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் நேரம் வரும்போது அதனை செய்வேன் என்றும் நெல்சன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…
கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…
பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…
ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…