தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான வி.ஜே கல்யாணி அள்ளித்தந்த வானம், ரமணா மற்றும் ஜெயம் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர் மற்றும் ஆண்டாள் அழகர் உள்ளிட்ட தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இப்படி புகழ்பெற்ற நடிகையாக இருந்த இவர் 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ரோகித் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்குப் பிறகு சின்ன திரையில் இருந்து விலகிய கல்யாணி அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் கல்யாணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் சோகமான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சோர்வாக உள்ளேன். என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு எனக்கு முதுகு தண்டில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில் சிறிது காலம் நலமாக இருந்த நான் அதன் பிறகு குழந்தை பிறந்து ஆறு மாதங்களாக மிகவும் சிரமப்பட்டேன். கடந்த சில மாதங்களாக என் முதுகு தண்டுவட நிபுணரிடம் ஆலோசனை செய்தேன். அப்போது அவர் இதற்கு முன்பு நடந்த அறுவை சிகிச்சையில் குணமாகவில்லை இதனால் இந்த முறை ஸ்க்ரூவை அகற்றிவிட்டு மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்.
வேறொருவரின் எலும்பு பயன்படுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளதால் இந்த முறை நான் குணமடைய பல நாட்கள் ஆகும். என்னுடைய கணவர் ரோகித் என்னுடைய கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நின்றார். என்னுடைய ஐந்து வயது மகள் என் மீது காட்டிய பாசத்தை என்னால் நம்பவே முடியவில்லை . எனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும் என்னை கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களுக்கும் மிகவும் நன்றி நான் என் உடலை இனி முன்பை விட நன்றாக கவனித்துக் கொள்வேன் என்ற உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…
ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…
திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…