நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். ஒரு கட்டத்துக்கு பிறகு படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். இப்போது இயக்குநர், உதவி இயக்குநர், காமெடி நடிகர் என்ற நிலையில் ரமேஷ் கண்ணா இருந்து வருகிறார், சமீபத்தில் ஜெயிலர் படம் குறித்து தனது விமர்சனத்தை ஒரு நேர்காணலில் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.
ஜெயிலர் படம் குறித்து ரமேஷ் கண்ணா கூறுகையில், ஜெயிலர் படம் பார்த்தேன். கொஞ்ச நேரம்தான் பார்க்க முடிஞ்சது. அதுக்கு மேல பார்க்க முடியல. சரி, என்னதான் கதை அப்படீன்னு கடைசியில பார்த்தா, ரஜினி பையனை சுட்டுடறாரு. அது தங்கப்பதக்கம். சிவாஜி சார் பண்ணிய படம். பையன் நாட்டுக்கு விரோதமா செயல்படறான்னு அப்பா கொன்னுடுவாரு. அதுதான் தங்கப்பதக்கம் படம்.
ஆனா அதுல ஒரு பேமிலி டிராமா இருந்துச்சு. கதை கொண்டு வந்தாங்க, இழுத்தாங்க, பீல் பண்ண வெச்சு, அப்படி கடைசி வரை உட்கார வெச்சாங்க. இதுல அப்படி எதுவும் இல்லியே, எல்லாத்தையும் படத்துல சுட்டாரு, கடைசியில பையனையும் சுட்டுட்டாரு. அவ்வளவுதான். ஆன் தி வேயில பையனையும் சுட்டுட்டு போயிட்டாரு, என்று கிண்டலாக கூறியிருக்கிறார் இயக்குநர் ரமேஷ் கண்ணா. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ஆரம்பத்திலேயே இது தங்கப்பதக்கம் படத்தின் கதை தான் என்றுதான் விமர்சித்தனர்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…