தமிழ் சினிமா வரலாற்றில் புது சாதனை…! முதல் வாரத்திலேயே கோடிகளை குவித்த ‘ஜெயிலர் 2’… இணையத்தை அதிரவைக்கும் கலெக்ஷன்….!!

By Devi Ramu on ஐப்பசி 22, 2026

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது. கடந்த அக்டோபர் 15 அன்று வெளியான இப்படம், கலவையான வரவேற்புகளுக்கு இடையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வெறும் ஒரே வாரத்திற்குள் உலகளவில் ரூ.549 கோடிக்கும் அதிகமாக வசூலித்துச் சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் பெருமையைத் ‘ஜெயிலர் 2’ பெற்றுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. ரஜினியுடன் ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தின் மெகா வசூல் சாதனைத் தமிழ் திரையுலகினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.