ஒரே நொடியில் பயங்கரம்…! பேருந்து விபத்தில் சிக்கி உரிமையாளர் உள்பட 5 பேர் துடிதுடித்து பலி… உயிருக்கு போராடிய 15 பேர்… கோர விபத்து…!!!

By Devi Ramu on ஐப்பசி 22, 2026

Spread the love

சத்தீஸ்கர் மாநிலத்தில் மநேந்திரகர் பகுதியிலிருந்து கெல்ஹாரி நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, பஹாத் ஹன்சுவாஹி அருகே எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்தப் பயங்கர விபத்தில் பேருந்தின் உரிமையாளர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு உடனடியாகக் கெல்ஹாரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.