நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் ஜெயிலர் 2. இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இப்போது இந்த ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மாஸ் ஹிட் ஆன ஜெயிலர் படம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானதால் இந்த ஜெயிலர் 2 படத்தையும் ஆகஸ்ட் மாதமே ரிலீஸ் செய்ய படக்குழு சென்டிமென்ட் ஆக திட்டமிட்டது.
ஆனால் இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. அதனால் 6 மாதங்கள் வரை ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டாம் என்பதாலும், ரஜினி கமல் நடிக்கும் படத்தை இயக்குனர் நெல்சன் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதனால் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னதாகவே வரும் ஜூன் மாதம் ஜெயிலர் 2 படம் ரிலீஸ் என்று முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
