ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு மாறியுள்ள ரவீந்திர ஜடேஜா, சிஎஸ்கே வீரர் கலீல் அகமது அணிந்திருந்த சீருடையிலுள்ள ‘சிஎஸ்கே லோகோ’விற்கு முத்தமிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 12 ஆண்டுகளாகச் சென்னை அணியின் தூணாக விளங்கிய அவர், தற்போது வேறு அணிக்கு விளையாடினாலும் சிஎஸ்கே மீதான தனது மாறாத அன்பை இந்தச் செயலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்றைய போட்டிக்கு பிறகு நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜடேஜாவை சிஎஸ்கே நிர்வாகம் விடுவித்தது ஒரு தவறான முடிவு என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
