சென்னை திரு.வி.க நகர் பகுதியில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான இரட்டைக் கொலை சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாகப் பணியாற்றி வரும் சீனிவாசன் என்பவர், தனது மனைவி சிவரஞ்சனி மற்றும் 9 வயது மகள் ஜெயஹரிணி ஆகியோரைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலப் பாதிப்பிற்காகச் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், தனது மனைவியின் நடத்தையில் கொண்ட கடும் சந்தேகமே இந்த விபரீத முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய சீனிவாசன், மாடியில் தனது மனைவி மற்றும் மகளுடன் உறங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் கணவன் – மனைவி இடையே திடீரென வாக்குவாதம் வெடித்ததில், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சீனிவாசன் கத்தியால் சிவரஞ்சனியின் கழுத்தை அறுத்துள்ளார். இதைக் கண்டு அலறிய தனது 9 வயது மகள் ஜெயஹரிணியையும், சத்தம் வெளியே கேட்டுவிடும் என்ற பயத்தில் பெற்ற தந்தை என்றும் பாராமல் அதே கத்தியால் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலைச் செய்துவிட்டுத் தலைமறைவான சீனிவாசன், அதிகாலையில் தனது தாய்க்கு போன் செய்து கொலையைப் பற்றித் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் மைதிலி, மாடிக்குச் சென்று பார்த்தபோது மருமகளும் பேத்தியும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அலறியுள்ளார். அதிர்ஷ்டவசமாக, சீனிவாசனின் 16 வயது மகன் பிரணவ் அன்று இரவு தனது பாட்டியுடன் கீழ் தளத்தில் தங்கியிருந்ததால் உயிர் தப்பியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திரு.வி.க நகர் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த சீனிவாசனைத் தேடத் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், திருமுல்லைவாயல் பகுதியில் பதுங்கியிருந்த அவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். சந்தேகத்தாலும் மனநலப் பாதிப்பாலும் ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…