தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பான அதிரடி திருப்பங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் போதிய அளவில் இல்லை என்ற அதிருப்தி ஒருபுறம் இருக்க, கட்சியின் முக்கிய முகமான அண்ணாமலை போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பாஜக வலுவாக இருப்பதாகக் கருதும் கோவை மற்றும் சென்னை பகுதிகளில் தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அண்ணாமலை குறிவைத்ததாகக் கூறப்படும் சிங்காநல்லூர், சூலூர் போன்ற தொகுதிகளை அதிமுக விட்டுக்கொடுக்காதது, இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. கடினமான தொகுதிகளை பாஜகவுக்குத் தள்ளிவிட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
புதுச்சேரி தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்த அண்ணாமலை, பாஜக மேலிடத்தின் அவசர அழைப்பை ஏற்று ஹெலிகாப்டர் மூலம் சென்னை விரைந்துள்ளார். சென்னை கமலாயத்தில் இன்று நடைபெறும் பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் வந்துள்ளார். இக்கூட்டத்தில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு, வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய உள்ளார். அதிமுகவிடம் கூடுதல் தொகுதிகள் அல்லது தொகுதிகளை மாற்றித் தருமாறு பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த திடீர் வருகை தொகுதி மாற்றத்திற்கான பேச்சுவார்த்தையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காகத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அவரைத் தேர்தல் களத்தில் இறக்க டெல்லி மேலிடம் விரும்புவதாகத் தெரிகிறது. குறிப்பாக, கோவையில் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிட்டால் அது கூட்டணிக்கு வலுசேர்க்கும் என பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். இன்றைய மையக்குழு கூட்டத்தில் அண்ணாமலையைச் சம்மதிக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறுமா அல்லது அவர் தேர்தல் பணிகளை மட்டும் கவனிப்பாரா என்பது இன்னும் சில மணிநேரங்களில் வெளியாகும் அதிகாரப்பூர்வ பட்டியலின் மூலம் உறுதியாகும்.
வியட்நாமில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பெண் ஒருவருக்கு இருசக்கர வாகனத்திலேயே குழந்தை பிறந்த அதிர்ஷ்டகரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…
ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…
சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…
உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக வந்த இரயில் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பசுவின் மீது மோதிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.…
மும்பையின் மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் கைபேசிகளை நள்ளிரவில் திருட முயன்ற…