பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியானது தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளில் இருந்தே அதிரடியாக விளையாடிய பிரதீப் ஆண்டனியின் மீது சக ஹவுஸ்மேட்ஸ்கள் அளித்த புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் காரணமாக பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதுவரை நடந்த சீசன்களில் வைத்து பார்க்கும் போது இந்த சீசனில் களமிறங்கிய பிரதீப் ஆண்டனியை போல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தெளிவாக புரிந்து கொண்டு விளையாட வந்தவர்கள் யாரும் இல்லை என சொல்லும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை புரிந்து கொண்டு விளையாடியவர் தான் பிரதீப். பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு விளையாட்டு இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்ற விஷயத்திலும் பிரதீப் ஆண்டனி ஒட்டுமொத்த ஹவுஸ் மேட்ஸ்களுக்கும் தனிநபராய் அனைவரையும் எதிர்த்து அசைக்க முடியாத ஒரு போட்டியாளராக வலம் வந்தார்.

இதுதான் என்னுடைய கேரக்டர், இப்படித்தான் நான் பேசுவேன் இப்படித்தான் நடத்துவேன் அனைவரையும் என்பது போல, காதல் கன்டென்ட் ரெடி செய்வது பற்றி பேசுவது, பெண்களைப் பற்றி மட்டமாக பேசுவது, மரியாதை இன்றி எல்லோரிடமும் பேசுவது சண்டை பிடிப்பது, ஒரு உச்சகட்டத்திற்கு அந்த சண்டை சென்ற பிறகும் அதனை உணர்ந்து மன்னிப்பு எதுவும் கேட்காமல் அலட்சியப்படுத்துவது, குறிப்பாக பெண்களை குறித்து செய்யும் கமெண்ட்கள் என பிரதீப் செய்த சேட்டைகளும் ஏராளம்.

எது எப்படியோ தற்பொழுது பிரதீப் மெஜாரிட்டி போட்டியாளர்களால் டார்கெட் செய்யப்பட்டு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த விஷயம் தான் தற்பொழுது இணையம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஒருபுறம் ஒருசிலர் அவருக்கு ரெட் கார்டு கொடுத்தது சரி தான் என்று கூறினாலும், பலர் இதனை கண்டித்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
Archana you begin the game stay strong ???? #BigBoss7tamil #VJArchana
— Aari Arujunan (@Aariarujunan) November 7, 2023
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் பிக் பாஸ் டைட்டில் வின்னரான ஆரி பிக் பாஸ் சீசன் 7 குறித்து வெளியிட்ட பதிவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் அந்த பதிவில், ‘ Archana you begin the game stay strong’ என்று குறிப்பிட்டுள்ளார்.
