கில்லி படத்தில்.. “அந்த ஒரு சீன் எடுக்க 17 நாள் ஆச்சு”.. அப்பவே 50 கோடி.. தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்..!!

By Mahalakshmi on சித்திரை 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் தற்போது மாஸ் ஹீரோவாக இருந்து வரும் இவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது கில்லி.

   

தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய திரைப்படம் கில்லி. இன்று இந்த திரைப்படம் ரீரிலீஸ் ஆகியுள்ளது. சுமார் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது .

   

 

டிக்கெட் முன்பதிவில் ரீரிலீஸ் மிகப் பெரிய சாதனை செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் அமெரிக்காவில் உள்ள ஓவர்சீஸ் நேற்று வெளியான கில்லிப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.

இது தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும். நடிகர் விஜய்க்கு முதல் முறையாக 500 கோடி ரூபாய் லாபத்தை எடுத்துக் கொடுத்த திரைப்படம் கில்லி.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இந்த திரைப்படத்தை 20 கோடி பட்ஜெட்டில் எடுத்ததாகவும். ஒவ்வொரு சீனுக்கும் மிகவும் மெனக்கட்டு இப்படத்தை தரணி மாஸாக எடுத்திருந்தார் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் படத்தின் ஒபெனில் வரும் பைட் சீன் மட்டும் 17 நாட்கள் எடுத்ததாக அவர் கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் ஒரு படத்திற்கு அட்டையை வைத்து செட்டு போடுவார்கள். ஆனால் அப்போது கான்கிரீட் வைத்து செட்டு போட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையையும் கில்லி தான் பெற்றது என கூறியிருந்தார்கள்.

 

இந்த திரைப்படம் இத்தனை வருடங்களை தாண்டியும் அதிக அளவு வரவேற்பை பெற்றுள்ளது. மிகப் பெருமையாக இருக்கின்றது. இப்படத்தின் வசூல் எந்த அளவு இருக்கின்றது என்பது நாளைக்கு தெரியவரும்.