ஏன் இப்படி பண்ணீங்க?… மரபுமீறலா இல்லை சதியா?… நிர்மலா சீதாராமனை வரவேற்காத தவெக… கடுப்பான நிதியமைச்சர்… டெல்லியில் வெடித்த புயல்… CM விஜய்க்கு காத்திருக்கும் நெருக்கடி…!

By Visaka on ஆடி 26, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டத்திற்கு கடந்த ஜூலை 18-ஆம் தேதி அரசு முறைப் பயணம் மேற்கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, மாவட்டத்தைச் சேர்ந்த தவெக அமைச்சர்கள் இருவரும் நேரில் சந்தித்து மரபுமீறலா இல்லை சதியா?பளிக்காதது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர்கள் வருகையின்போது மாநில அமைச்சர்கள் வரவேற்பது வழக்கமான அரசு மரபு என்ற போதிலும், இந்நிகழ்வில் அமைச்சர்கள் பங்கேற்காதது குறித்து நிர்மலா சீதாராமன் அங்கிருந்த அதிகாரிகளிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பியது பரபரப்பை கூட்டியது.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கையில், மத்திய அமைச்சரின் வருகை தொடர்பான விவரங்கள் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து மிகத் தாமதமாகவே தங்களுக்குக் கிடைத்ததாகவும், அதனால் முன் திட்டமிட்ட பயணங்களை மாற்ற இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாவட்டத்தின் உயர் அதிகாரி ஒருவர் திட்டமிட்டு அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக அமைச்சர்கள் தரப்பு குற்றம்சாட்டியுள்ளதுடன், இதுகுறித்து மேலிடத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.

   

மத்திய அமைச்சரின் வருகையின்போது அரங்கேறிய இந்த மரபுமீறல் சம்பவம் சென்னை தலைமைச் செயலகம் வரை எதிரொலித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கா அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட சதியா என்பது குறித்து தற்போது விரிவான உயர்மட்ட விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காலவரிசை மற்றும் கடிதப் போக்குவரத்துகள் குறித்த ஆய்வின் முடிவில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான துறைரீதியான நடவடிக்கைகள் விரைவில் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.