போலீஸ்கே தண்ணி காட்டும் செந்தில் பாலாஜி… “ரூ.35 கோடி குதிரை பேரம்… “14 பேர் கைது… ஆனாலும் ஒரு துளி ஆதாரம் இல்லையா?… தவெக வழக்கில் திணறும் காவல்துறை…!

By Visaka on ஆடி 26, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக எம்எல்ஏக்கள் பேரம் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிக்க வைப்பதற்கான போதிய ஆதாரங்கள் காவல்துறைக்கு கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் தவெக குதிரை பேரம் பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தவெக எம்எல்ஏக்களான இளையராஜா மற்றும் விஜயை தலா ரூ.3 கோடிக்கு பேரம் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு மற்றும் தீபம் பைனான்ஸ் நிறுவனத்தினர் உள்பட மொத்தம் 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். திருநாவுக்கரசுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் தீபம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.2.82 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பணப் பரிமாற்றம் நட்பு ரீதியிலானது என்று கூறப்படுவதோடு, இவற்றுக்கும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

   

இதன் காரணமாக செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் தரப்பினர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ள நிலையில், இவ்வ வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் காவல்துறையினர் தொய்வை சந்தித்துள்ளனர். குற்றத்தை நிரூபிப்பதற்கான வலுவான சாட்சிகளோ ஆதாரங்களோ இல்லாததால், கைதானவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமாகவே காவல்துறை தனது விசாரணையை நகர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.