Connect with us

CINEMA

என்னது.. ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் காணாமல் போயிருச்சா..? மகள் இயக்கும் படத்திற்கு வந்த சிக்கல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினி தனுஷின் 3, கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கினார். தற்போது லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

   

இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. முக்கியமாக ரஜினி லால் சலாம் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். அவர் மொய்தின் பாய் என்ற பெயரில் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. வருகிற ஜனவரி மாதம் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். அதற்கான வேலைகளும் மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் லால் சலாம் படம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 20 நிமிடம் வரும் ரஜினி நடித்த காட்சிகள் டெலிட் ஆகிவிட்டதாம். இதுகுறித்த செய்தி சமூக வலைதளத்தில் வெளிவந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top