இடைத்தேர்தல் களத்தில் பின்வாங்கிய ஸ்டாலின்…. உதயநிதி கையில் மொத்த அதிகாரம்… அறிவாலயத்திற்கு சென்ற ரகசிய சர்வே…..!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

வரவிருக்கும் இடைத்தேர்தல் களத்தில் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடாமல் விலகி நிற்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் திமுக வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வேட்பாளர் தேர்வில் கூட அவரது தலையீடு பெரிதாக இல்லை என்றும், தேர்தல் தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளையும் உதயநிதி ஸ்டாலினே முன்னின்று எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. வழக்கமாக பெரிய தேர்தல்கள் முதல் இடைத்தேர்தல்கள் வரை முன்னின்று வியூகங்களை அமைக்கும் ஸ்டாலின், இம்முறை பிரசாரக் களத்தில் இருந்து முற்றிலும் ஒதுங்கியிருப்பது கட்சியினரிடையே பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

இந்த விலகலுக்குப் பின்னணியில் அண்மையில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே முடிவுகளே முக்கியக் காரணம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சர்வேயில் திமுக கூட்டணி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் ஸ்டாலினுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே அவர் பிரசாரத்தைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகவும், அடுத்தகட்டமாக எடுக்கப்படவுள்ள புதிய சர்வேயில் கட்சிக்குச் சாதகமான சூழல் நிலவுவது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவர் பிரசாரக் களத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.