டிசம்பரில் கேட்கப்போகும் மழலைச் சத்தம்… வைரல் போட்டோக்களில் கசிந்த உண்மை… சமந்தா கர்ப்பமாக இருப்பது உறுதியானது – ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

By Swetha on ஆனி 22, 2026

Spread the love

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களைச் சந்தித்து மீண்டு வந்துள்ளார். நடிகர் நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பின், உடல்நலக் குறைவால் சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்தார். அதன்பின், அவதூறுகளையும் கடினமான சூழ்நிலைகளையும் அமைதியாகக் கடந்து வந்தவர், பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து கடந்த ஆண்டு கோவை ஈஷா யோகா மையத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

சமந்தா மற்றும் அவரது கணவர் ராஜ் நிடிமோரு இணைந்து தயாரித்து, இந்த வாரம் திரைக்கு வந்த ‘எங்கள் தங்கம்’ திரைப்படம், வெளியான ஒரே நாளில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த பிரம்மாண்ட வெற்றியைப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், சமந்தா தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கவனித்து அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.

   

https://www.instagram.com/reel/DZz3DiHp3Qy/?utm_source=ig_web_button_share_sheet

   

தற்போது ரசிகர்களின் அந்த சந்தேகம் உண்மையாகி, சமந்தா கர்ப்பமாக இருக்கும் தகவல் உறுதியாகி இருக்கிறது. அவர் வரும் டிசம்பர் மாதத்தில் குழந்தையைப் பெற்றெடுக்க உள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் மூலம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த இரட்டை சந்தோஷச் செய்தியைக் கேட்டு நெகிழ்ந்துபோன அவரது ரசிகர்கள், இணையதளம் வாயிலாக சமந்தாவிற்கு தங்களது வாழ்த்துக்களை வாரி இறைத்து வருகின்றனர்.