சென்னை, மேற்கு முகப்பேர் திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ரோஷன் நாராயணன் (24) என்ற இளைஞர், அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இவரது குடும்பத்தினர் அனைவரும் திருப்பதி கோயிலுக்குச் சென்றிருந்தபோது, ரோஷன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இன்று அதிகாலை குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால், ஜன்னல் வழியாகப் பார்த்தனர். அப்போது ரோஷன் நாராயணன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அவரை மீட்டுப் பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த நொளம்பூர் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரோஷன் நாராயணன் இருந்த அறையைச் சோதனையிட்டபோது, அங்கு ஒரு கடிதம் சிக்கியது.
அந்தக் கடிதத்தில், “தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல ஓர் ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதாகவும், இதனால் மன உளைச்சல் அதிகரிப்பதாகவும் எழுதியிருந்தார். மேலும், தனது சகோதரரிடம் சண்டையிட்டதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டு, பெற்றோர் தன்னை மன்னித்து விடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். போலீசார் அவரது கைபேசியைக் கைப்பற்றி, தற்கொலைக்கான சரியான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…