இதை செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து?…. இனி பொருள் வாங்க முடியாது…. தமிழக அரசின் புதிய விதிமுறை… உடனே கிளம்புங்க…!

By Nanthini on ஆடி 19, 2026

Spread the love

ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைரேகை மற்றும் கருவிழி (பயோமெட்ரிக்) பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடைகளில் கைரேகை சரிபார்ப்பு மற்றும் e-KYC பதிவை மேற்கொள்வதில் சிலருக்கு தொழில்நுட்பக் குறைபாடுகள் அல்லது உடல்நலக் குறைவு காரணமாகப் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கைரேகை விழுவதில் சிக்கல் உள்ளவர்கள் உடனடியாக தங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் எல்காட் (ELCOT) நிறுவனம் மூலம் நடத்தப்படும் அரசு ஆதார் சேவை மையங்களை அணுகி, அங்கு தங்களின் பயோமெட்ரிக் விபரங்களை மறுபதிவு அல்லது புதுப்பித்தல் செய்து கொள்ளலாம். இந்த மையங்களில் தங்களின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழிப் பதிவைச் சரியாகப் புதுப்பித்த பின்னர், தங்களுக்குரிய ரேஷன் கடைகளுக்குச் சென்று தடையின்றி தங்களது கைவிரல் ரேகை சரிபார்ப்பு e-KYC பதிவை எளிதாக மேற்கொண்டு, வழக்கம் போல் தங்களின் குடும்ப அட்டைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.