இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே… டெல்லிக்கு பறந்த ரகசிய தூது… மோடி அரசுக்கு ஆதரவு தரும் திமுக?… அதிர்ச்சியில் அறிவாலயம்….!

By Nanthini on ஆடி 19, 2026

Spread the love

திமுக மற்றும் பாஜக இடையே ரகசியப் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக வெளியாகியுள்ள அரசியல் தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆகிய விவகாரங்கள் மட்டுமன்றி, மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை திமுக எடுப்பது குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தொடக்கத்தில் இந்த பேச்சுவார்த்தைக்கு திமுக தரப்பு உடன்படவில்லை என்றாலும், தற்போது சாதகமான சிக்னல் கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன; இதையே நேற்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் திமுக – பாஜக இடையே திரைமறைவுப் பேச்சுவார்த்தை நடப்பதாக வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார் என்பது இந்தத் தகவல்களுக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.