ஈரானின் மூளை காலி… நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய அதிரடி வேட்டை… அலறும் மத்திய கிழக்கு… மூன்றே நாட்களில் 3 விக்கெட்டுகள்…!!!

By Rajeshwari on பங்குனி 18, 2026

Spread the love

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஈரானின் முக்கியத் தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய மூன்றாவது தாக்குதல் இதுவாகும். ஏற்கனவே பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி மற்றும் புரட்சிகரப் படையின் முக்கிய தளபதி கோலாம்ரெசா சுலைமானி ஆகியோரை இஸ்ரேல் வீழ்த்தியிருந்த நிலையில், இப்போது உளவுத்துறையின் ‘மாஸ்டர் மைண்ட்’ எனக் கருதப்படும் கதிப்பை இஸ்ரேல் குறிவைத்துள்ளது.

மேலும் ஈரான் மீது இஸ்ரேல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கில் இந்தத் தொடர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்ட தகவலை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானின் உளவுத்துறை மற்றும் நீதித்துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட கதிப், அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

இந்நிலையில் ஈரானின் உயர்மட்ட அதிகாரிகளை வேட்டையாட ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் ஈரானுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனினும், கதிப்பின் மரணம் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.