“வெளியே சொன்னா மார்க் போட மாட்டேன்…” 3-ஆம் வகுப்பு மாணவியை சீண்டிய 53 வயது ஆசிரியர்… வெளியான பரபரப்பு பின்னணி…!!

By Devi Ramu on பங்குனி 18, 2026

Spread the love

கரூர் மாவட்டம் வரவணை அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் 53 வயது ஆசிரியர் முருகன் என்பவர், பள்ளி நேரத்தில் மது அருந்திவிட்டு வந்து மாணவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வகுப்பறையிலேயே புகைபிடிப்பது மற்றும் மாணவர்களை ஆபாசமாகத் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இவர், மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் தேர்வில் தோல்வி அடையச் செய்வேன் எனச் சிறுமியை மிரட்டியுள்ளதோடு, மற்ற ஆசிரியர்களும் இவருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தபோது தலைமை ஆசிரியர் அலட்சியமாகப் பதிலளித்ததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் கரூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கல்வித்துறை மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரியர் முருகன் பல சிறுமிகளிடம் இதுபோன்று அநாகரிகமாக நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், குற்றம் செய்த ஆசிரியரைப் பணிநீக்கம் செய்யவும், அவருக்குத் துணையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.