விஜயகாந்த் ஒரு லட்சம் கொடுத்தது பொய்.. அந்த ஒரு பிரபலம் தவிர வேறு யாருமே போண்டாமணிக்கு உதவல.. உண்மையை உடைத்த காமெடி நடிகர் பெஞ்சமின்..

By admin on தை 9, 2024

Spread the love

கடந்த டிசம்பர் மாதத்தில் காமெடி நடிகர் போண்டாமணி உடல் நலக்குறைவால் காலமானார். பல தமிழ் படங்களில் ரசிகர்களை குலுங்க குலுங்க தனது காமெடி நடிப்பால் சிரிக்க வைத்த போண்டாமணி, அவரது குடும்பத்தை வறுமை நிலையில் விட்டுவிட்டு சென்றிருக்கிறார். இதுகுறித்து சக காமெடி நடிகரான பெஞ்சமின் வெளியிட்ட வீடியோ பதிவு சமீபத்தில் வைரலானது. இதையடுத்து ஒரு நேர்காணலில் நடிகர் பெஞ்சமின் கூறியதாவது. தென்னந்திய நடிகர் சங்கத்தை பொருத்த வரை அதன் தலைவர்களாக ராதாரவி, விஜயகாந்த், சரத்குமார் போன்ற இருந்த காலகட்டங்களில் சிறிய நடிகர்களுக்கு என்ற குறை என்றாலும் உடனடியாக கவனித்தார்.

   

வசதியற்ற நடிகர்கள் இறந்து போனால், நாடக நடிகர்கள் மறைந்து போனால் விஜயகாந்த், ராதாரவி, சரத்குமார் போன்றவர்கள், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு முதல் ஆளாக வந்து நிற்பார்கள். தேவையான அனைத்து உதவிகளையும் செய்வார்கள். நடிகர் சங்கத்தில் இருந்து இல்லாவிட்டாலும், தங்களது சொந்த பணத்தில் 10 ஆயிரம், 20 ஆயிரம், 30 ஆயிரம் என்று வாரிக்கொடுப்பார்கள். நான் அவர்கள் நிர்வாகிகளாக இருந்த காலகட்டத்தில் செயற்குழு உறுப்பினராக அவர்களுடன் பணிசெய்திருக்கிறேன். அவர்களது செயல்பாடுகளை அருகில் இருந்து பார்த்திருக்கின்றனர். மிகச் சிறந்த தலைவர்களாக அவர்கள் இருந்தனர்.

   

 

போண்டாமணி இறந்த போது விஜயகாந்த் தரப்பில் ஒரு லட்சம் ரூபாய் தந்ததாகவும், 12 லட்சம் ரூபாய் செக் கொடுத்து ஒரே செக்கில் போண்டாமணியின் மொத்த கடனை அடைத்ததாகவும் தவறான செய்திகள் வந்தன. அது உண்மை இல்லை. போண்டாமணி இறுதி சடங்குக்கு என 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே தேமுதிக தரப்பில் தரப்பட்டது. மேலும் போண்டாமணி குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக பிரேமலதா, சண்முகபாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோர் உறுதி தந்துள்ளனர்.

ஆனால் வேல்ஸ் கல்வி நிறுவனம் தலைவர் ஐசரி கணேசன், போண்டாமணி மகளின் 3 ஆண்டுகால கல்லூரி படிப்பு முழுவதையும் அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த பெண் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாள். அந்த படிப்பு முடிந்து முதல் மாத சம்பளம் வாங்கும் வரை அத்தனை செலவும் என்னுடையது என கூறியிருக்கிறார். அவர்தான் வாழும் வள்ளல் என்று பெஞ்சமின் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.