2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைவது குறித்த அரசியல் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. நீண்ட நாட்களாக எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சித்து வந்த தினகரன், தற்போது மென்மையான போக்கை கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது. மதுராந்தகத்தில் பிரதமர் மோடியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்களில், அதிமுக மற்றும் பாஜக தலைவர்களுடன் டிடிவி தினகரனின் படமும் இடம்பெற்றிருப்பது அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. அமித் ஷா மற்றும் பாஜக மேலிடத்தின் முன்னெடுப்பால், கடந்த கால கசப்புகளை மறந்து அதிமுக கூட்டணியை டிடிவி தினகரன் ஏற்றுக்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை “கூட்டணியின் தலைமை” வெளியிடும் என்று கூறி சஸ்பென்ஸை நீட்டித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தினகரன் தனி அமைப்பாகச் செயல்படுவதால் அவர் கூட்டணியில் இணைவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று டெல்லி மேலிடத்திற்குத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த ‘வலுவான கூட்டணி’ அவசியம் என்பதால், சிதறிக் கிடக்கும் அதிமுக வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க இந்த இணைப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் அதிமுக – பாஜக – அமமுக ஆகிய கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி.23-ல் தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் TTV பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுக மா.செ.,க்கள் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர தயார் நிலையில் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளாராம். இதனால் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணியில் TTV இணைவார் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக மூத்த…
சீனாவின் வூகான் நகரில் இருந்தபடி, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள நோயாளி ஒருவருக்கு 5ஜி தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் உதவியுடன் வெற்றிகரமாக…
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த…
ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…