“விஜய் போட்ட ரகசிய ஸ்கெட்ச்”…. த்ரிஷாவிற்கு கிடைக்கப்போகும் அந்த டெல்லி பதவி?…. கசிந்த சீக்ரெட் தகவல்….!

By Nanthini on ஆவணி 21, 2026

Spread the love

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ ஏற்படுத்தியுள்ள அலைகளுக்கு இடையே, பிரபல நடிகை த்ரிஷாவை அக்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக்க திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே தவெக தொடர்பான நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் த்ரிஷாவின் வருகை குறித்து பலவிதமான விவாதங்களும் வதந்திகளும் உலா வந்த நிலையில், அவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்து இடைத்தேர்தல் அல்லது வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் களத்தில் போட்டியிடுவார் என்ற பேச்சுகள் வலுப்பெற்று வருகின்றன.

த்ரிஷாவின் திரைப் புகழையும் செல்வாக்கையும் பயன்படுத்தி அவரை டெல்லிக்கு அனுப்பி, தேசிய அளவில் கட்சியின் குரலாக ஒலிக்கச் செய்ய விஜய் முனைப்பு காட்டி வருவதாகக் கூறப்பட்டாலும், இது குறித்து தவெக தரப்பிலோ அல்லது நடிகை த்ரிஷா தரப்பிலோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உறுதிசெய்யப்படவில்லை.